கோவை: டாஸ்மாக் கடைகளில் அதிகம் வசூலிக்கக்கூடாது

562பார்த்தது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலிக்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இரவு 10 மணிக்குப் பிறகு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 11 to 11 முறையில் செயல்படும் 1,600 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறினார். டாஸ்மாக் ஊழல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி