கோவை துடியலூர்–சரவணம்பட்டி சாலையில் உள்ள எஸ். என். எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாடிஃபைடு கார் ஷோவில், மாணவர் ஓட்டிய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பார்க்கிங்கில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 மாணவிகள் நூலிழையில் உயிர்தப்பினர். பல வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தின் செல்போன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.