2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சித் தலைவர் முதல்வராவது உறுதி என தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் பாரம்பரியமாக இரண்டு பெரிய இயக்கங்களே மாநிலத்தை ஆள வேண்டுமா என சிந்தித்து வருவதாகவும், தற்போது மக்கள் புதிய தலைமையை விரும்பி முடிவு செய்து விட்டதாகவும் கூறினார். இதன் காரணமாகவே பிற கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தங்கள் கட்சித் தலைவரைப் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். மேலும், 2026 ஆம் ஆண்டு தங்கள் தலைவர் விஜய் முதல்வராவது உறுதி என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.