கோவை: நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை

0பார்த்தது
கோவை: நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை
கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை, வரப்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை, கார்த்திகேயன் என்பவரின் தோட்ட வீட்டிற்குள் நுழைய முயன்றது. நாய்கள் குரைத்ததால் விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து, யானை பின்வாங்கி செடிகளை மேய்ந்து வனப்பகுதிக்கு திரும்பியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. கோடை காலம் நெருங்குவதால், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வனப்பகுதிகளிலேயே தேவையான வசதிகளை ஏற்படுத்த வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி