மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே இயங்கும் நகைக்கடையில் கடந்த 6ம் தேதி மாலை இரு பெண்கள் கவரிங் நகையை மாற்றி உண்மையான தங்க நகையை திருடிச் சென்றனர். சுமார் 10 கிராம் எடையுள்ள தங்க நகை மாயமானது. மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு பெண்களைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.