சரவணம்பட்டி: போக்குவரத்து விதிமீறல்: இளைஞர்களுக்கு ரூ.19,500 அபராதம்

620பார்த்தது
கோவை சரவணம்பட்டி சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி, சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசமாக சென்ற இளைஞர்களை போலீசார் நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதது மற்றும் பொதுப்பாதையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக இருவருக்கும் தலா ரூ. 7,500 மற்றும் ரூ. 12,000 அபராதம் விதிக்கப்பட்டது. போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி