சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூர் மாவட்ட கட்டிட தொழிலாளி சுந்தர் (22) உடன் பழகி வந்துள்ளார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற அவர், 2 மாதங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு, சுந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.