பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு படித்து வந்தான் ஹரிஸ். கடந்த 12-ம் தேதி ராமபட்டினம் மதுரை வீரன் கோவில் அருகே விளை நிலம் கொண்டிருந்தான். அப்பகுதியில் சபரிவாசன் ஓட்டி வந்த டிராக்டர் வண்டியை பார்த்ததும் அவனது வண்டியில் ஏறிச் சென்றுள்ளான்.
சபரிவாசன் டிராக்டரை தோட்டத்தில் ஓட்டிக் கொண்டிருந்தபோது பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஹரிஸ் தவறி விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்த ஹரிசை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் ஹரிஸ் உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.