பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

71பார்த்தது
பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி
பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று கோட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உடுமலை சாலையில் உள்ள கெடிமேடு வாய்க்காலில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளிக்கச் சென்ற மகாலிங்க இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தரணிதரன் (வயது 19) என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட காவல்துறையினர், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி