பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனையை எதிர்த்து, 2ஆவது குற்றவாளியான திருநாவுக்கரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தீர்ப்பு வழங்கிய 60 நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலையில், தாமதமானது குறித்த ஒரு மனுவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.