புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று, 5வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமி சித்தர் கோயிலில் தேர்தல் வெற்றி சான்றிதழை வைத்து சாமி தரிசனம் செய்தார்.