
கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்
கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே கனிம வளங்களை ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. காரமடை, காரம்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
































