உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் மீதான அடக்குமுறையைக் கண்டித்தும் கோவை பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பிஜிஎம் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து நிரந்தர வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.