கோவை: 7 மாதங்களில் 18. 38 லட்சம் பயணிகள்; ஆணையம் தகவல்

56பார்த்தது
கோவை: 7 மாதங்களில் 18. 38 லட்சம் பயணிகள்; ஆணையம் தகவல்
கோவை விமான நிலையத்தில் கடந்த ஏழு மாதங்களில் 18.38 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக விமான நிலைய ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொழில், வர்த்தகம், மருத்துவ தேவைகளுக்காக கோவைக்கு விமானம் மூலம் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். 

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 2.58 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். இது முந்தைய மாதங்களை விட 5.6 சதவீதம் அதிகம். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில் கோவை விமான நிலையம் வழியாக 18.38 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.3 சதவீதம் அதிகமாகும்.

தொடர்புடைய செய்தி