கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் டேவிட் மார்க்(28). கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று முன்தினம் அங்குள்ள மளிகை கடை அருகே காரை நிறுத்தியிருந்தார். அப்போது காரில் வந்த 2 பேர் காருக்கு வழிவிடுமாறு கூறியதில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி டேவிட் மார்க்கை தாக்கினர்.
இதனை பார்த்து தடுக்க முயன்ற டேவிட் மார்க்கின் தந்தையையும் அவர்கள் தாக்கினர். இது குறித்து டேவிட் மார்க் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், டேவிட் மார்க்கை தாக்கியது திருச்சி துறையூரை சேர்ந்த அரவிந்த்(22), திருநெல்வேலி மாவட்டம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த இசக்கிராஜ்(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.