கோவை கவுண்டம்பாளையம் நகை மற்றும் பணம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பர்ஹான் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றபோது, நாகமலை புதுக்கோட்டை அருகே சாப்பாடு வாங்கிய நேரத்தில் போலீஸ் வேனில் இருந்து பர்ஹான் தப்பி ஓடிவிட்டார். தப்பிய குற்றவாளியை விரைவில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.