கோவை: 9 ஏக்கரில் பசுந்தீவனம் - ஆட்சியர் ஆய்வு!

0பார்த்தது
சிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 9 ஏக்கர் மேய்க்கால் நிலத்தில், கால்நடை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பசுந்தீவனம் உள்ளிட்ட பயிர்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் இத்திட்டம், தீவனப் பற்றாக்குறையைக் குறைத்து விவசாயிகளின் செலவைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார். கிராமப்புற கால்நடை வளர்ச்சிக்கு இது முக்கியப் பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி