கோவை: காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு

633பார்த்தது
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை மயில்சாமி அண்ணாதுரை நேற்று திறந்து வைத்தார். இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இந்த மாதிரி, பொது இடத்தில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும், இது மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கும் செயற்கைக்கோள் அறிவியல் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி