கோவை: கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - காவல்துறை விசாரணை!

1பார்த்தது
கோவை: கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - காவல்துறை விசாரணை!
கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம், ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று இளைஞர்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வினித் என்ற இளைஞருடன் இருந்த மாணவியை, தாக்கிய பின் கடத்திச் சென்ற குற்றவாளிகள், பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவியை நிர்வாண நிலையில் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்த வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று குற்றவாளிகளையும் பிடிக்க பீளமேடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி