கோவை: திராவிட விடுதலைக் கழக நிர்வாகி உடல் தானம்

471பார்த்தது
கோவை திராவிட விடுதலைக் கழக புறநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே 17) உயிரிழந்தார். அவரது விருப்பப்படி, உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி உட்பட பலர் வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அரசு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி