காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடையே புதன்கிழமை நேரக்காப்பு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் நுழைவு வாயில் அருகே நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு, நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதியடைந்தனர். டிக்கெட் வசூல் மற்றும் நேரப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறுகள் நடப்பதாகவும், போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.