கோவை சோமையனூரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரான கார்த்திக் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்த பணம் கேட்டு மனைவி ரேவதியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் கார்த்திக் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரேவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.