கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (27) என்பவருக்கு உடுமலைப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் தொடர்பாக தாயார் மற்றும் அண்ணனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், துணி எடுப்பதாகக் கூறிச் சென்ற விஷ்ணு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.