கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று நசீம் என்பவருக்குச் சொந்தமான மர இழைப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மரப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமாயின. மெத்தை, நாற்காலி, மேஜை, கதவு போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தில், யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மரப்பொருட்கள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாகப் பரவி, அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.