கோவை: கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு: 4 பேர் சாட்சியம்

606பார்த்தது
கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், மாணவியின் தாய், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரி, உயிரி தொழில்நுட்ப பரிசோதனை அதிகாரி உள்ளிட்ட நான்கு பேர் சாட்சியம் அளித்துள்ளனர். சாட்சிகளின் விசாரணை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி