கோவை நேரு நகர் பகுதியில் அதிவேகமாக பாய்ந்த குதிரை, இருசக்கர வாகனம் ஓட்டிய ஜெயபால் என்பவரை கீழே தள்ளி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு குதிரையை துரத்தி வந்த குதிரை மோதி கீழே விழுந்தார். பின்னர் குதிரை அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதியில் குதிரைகளால் பொதுமக்கள் ஆபத்துக்குள்ளாகி வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.