கோவை: பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ - மோடி பேச்சு

1பார்த்தது
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில், ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பி.எம். கிசான் திட்டத்தின் 21-வது தவணையாக, நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகையை டிஜிட்டல் முறையில் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் பலன் அடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இயற்கை விவசாயம் ஒரு விஷேஷமான துறை என்றும், இங்கு வராமல் இருந்திருந்தால் பல விஷயங்கள் தெரியாமல் போயிருக்கும் என்றும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி