கோவை: நகை அடகு கடையில் நகைகள் கொள்ளை

519பார்த்தது
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நகை அடகு கடையின் பூட்டை உடைத்து சுமார் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகள் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டன. வசந்தாமில் பகுதியில் மகாதேவ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் ரமேஷ்குமார், சிவராத்திரி விடுமுறையையொட்டி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடையின் பின்புற ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். நகைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி