கோவை: நில அளவை - காத்திருப்பு நாட்கள் குறைப்பு

56பார்த்தது
கோவை: நில அளவை - காத்திருப்பு நாட்கள் குறைப்பு
நில அளவைத்துறை நவீனமயமாக்கப்பட்டதால், நில அளவையும், பட்டா மாறுதலையும் பெற காத்திருக்கும் நாட்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நில அளவைத்துறை அதிகாரி சரவணன் இன்று தெரிவித்தார். தற்போது டிரோன் சர்வே மற்றும் டி.டி.பி.எஸ். கருவியின் மூலம் துல்லியமான அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கோவையில் தற்போது 5 கருவிகள் உள்ளன. விரைவில் ஒவ்வொரு தாலுக்காவுக்கும் ஒன்று வீதம் சேர்க்கப்படும். முன்பு நில அளவுக்காக 6 மாதம் முதல் 1 வருடம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது இந்த காலம் 45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் கிராமப்புறங்களில் 2,739 மனுக்களும், நகர்ப்புற நிலங்களுக்கு 1,047 மனுக்களும் வந்துள்ளன. இவை விரைவில் முடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலில் காத்திருப்பு மனுக்கள் 53,000 இருந்தது. தற்போது இது 4,092 ஆக குறைந்துள்ளது. 

மேலும், நில அளவையாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது அரசு ஒப்புதல் பெற்ற பின் செயல்படும். மாநில அளவில் 1984-ல் நடந்த நில அளவீட்டுக்குப் பிறகு, அடுத்த ஆண்டில் புதிய மாநில அளவீட்டு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
Job Suitcase

Jobs near you