கோவை: ஆள்மாறாட்டம் செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

75பார்த்தது
கோவை: ஆள்மாறாட்டம் செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் நபரிடம் கடந்த 18.11.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் FedEx கூரியர் ஊழியர் எனவும் தன் அடையாளத்தை பயன்படுத்தி சில பார்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் புகார்தாரரிடம் கூறி ரூபாய் 10 லட்சம் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக டெல்லியைச் சேர்ந்த கோபி குமார் (42) மீது கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கின் விசாரணை கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவுபெற்று கோபிகுமாருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 1,50,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு 55 நாட்களிலேயே நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த புலனாய்வு அதிகாரி ஆய்வாளர் சித்ரா தேவி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திரு. அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.