கோவை மாவட்டம் சூலூர் அருகே, திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மாயமானார். அவரைத் தேடிய மணமகன் அளித்த புகாரில், புதுப்பெண்ணின் அக்காள் கணவர் சந்திரனும் மாயமானதை அறிந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுப்பெண்ணுக்கும், அவரது அக்கா கணவர் சந்திரனுக்கும் திருமணத்துக்கு முன்பே பழக்கம் இருந்ததும், திருமணத்திற்குப் பிறகு புதுப்பெண் சந்திரனைத் தொடர்புகொண்டு அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறியதும் இருவரும் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.