கோவை: பெட்ரோல் குண்டு பதுக்கல் வழக்கு.. 3 பேர் ஆஜர்

590பார்த்தது
2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் பட விவகாரத்தில் கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் குண்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட கிச்சன் புகாரி, சுலைமான், வளையல் ஹக்கீம் ஆகிய மூவர், பெங்களூரு சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். குனியமுத்தூரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, நீதிபதி ஜான் மினோ அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.