ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, 265 மெழுகுவர்த்திகளை ஏற்றி மலர்களுடன் அஞ்சலி செலுத்தினர். 2 நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், மாணவர்களில் இரக்கம், மனிதநேயமும் சமூக பொறுப்புணர்வும் வளர இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை, என்றார். நிகழ்வில் பள்ளித் துணைத்தலைவர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் இணைந்து எழுதிய அனுதாபக் குறிப்பு, பெரிய பதாகையாக தயார் செய்யப்பட்டு, ஆமதாபாத் அனுப்பப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.