கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு பேசினார். பீகாரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளும், தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளும் பயனடைந்து வருவதாகவும், பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பனாக செயல்படுவதாகவும் எல். முருகன் குறிப்பிட்டார்.