கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கதிர் குடும்பத்தினர், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் தங்கள் செல்லப் பறவையான மியா என்ற வெள்ளை நிற கிராக்டேயில் கிளியைக் காணவில்லை. பறவையைத் தேடி பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பறவையை கண்டுபிடித்து கொடுத்தால் 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பறவையின் புகைப்படம், நிறம், வயது உள்ளிட்ட விவரங்களும், அது 'மியா' அல்லது 'PEEK-A-BOO' என்று அழைத்தால் வந்து அமரும் தன்மை இருப்பதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாராவது பறவையைக் கண்டால் 99943 49476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.