கோவை: எஸ்.எஸ் எல்.சி. தேர்வில் 97.09% தேர்ச்சி

532பார்த்தது
கோவை: எஸ்.எஸ் எல்.சி. தேர்வில் 97.09% தேர்ச்சி
கோவை மாவட்டத்தில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வில் 97.09 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 2025-26 கல்வியாண்டில் 37, 844 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 36, 742 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95. 97 சதவீதமும், மாணவிகள் 98. 16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சி விகிதம் 0. 62 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அளவில் கோவை மாவட்டம் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி