கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு திமுக ஆட்சியே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று குற்றம் சாட்டினார். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என்றும், காவல்துறையின் மெத்தன போக்கும் திமுக ஆட்சியின் அலட்சியமும் இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் 18 ஆயிரம் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி போக்க்சோ வழக்குகள் என்றும், கஞ்சா மற்றும் போதைப் பொருள் பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு குண்டாஸ் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், தேவையானால் தூக்குத் தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம், நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.