பாலக்காடு சந்திப்பு - கோட்டேகாடு இடையே மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதால், இந்தப் பகுதியினூடாக செல்லும் சில ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பாலக்காடு டவுன் - கோவை இடையே இயங்கும் ரெயில் எண் 66606, ஜூன் 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - காஞ்சிக்கோடு வரையிலான பகுதியில் மட்டுமே ரத்து செய்யப்படுகிறது.
எனவே, இந்த தேதிகளில் அந்த ரெயில் பாலக்காடு டவுனிலிருந்து காஞ்சிக்கோடுக்கு இயக்கப்படாது. ஆனால், காஞ்சிக்கோடு ரெயில்நிலையத்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு செல்லும் சேவை வழக்கம்போல் தொடரும்.மேலும், சொரனூர் ரெயில்நிலையத்திலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சொரனூர் - கோவை பயணியர் ரெயில் (எண் 56604) ஜூன் 7ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.