கோவை தொண்டாமுத்தூரில் நேற்று நடைபெற்ற த. வெ. க பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். வேலுமணி செய்த ஊழல் பணத்தை ஸ்டாலின் அனுபவிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக-த. வெ. க இடையே தான் உண்மையான போட்டி என்றும், திமுக-அதிமுக இடையே மறைமுக உடன்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார்.