கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் திருச்சி மாவட்ட மாணவர் ஒருவர், சக மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து, போலியான பக்கத்தில் பகிர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.