கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இறுதியாண்டு மருந்தியல் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பாலாஜி (22) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 23 காலை அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால், சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.