கோவை: டெஸ்லா சைபர் டிரக் வைரல்

598பார்த்தது
கோயம்புத்தூர் நகர சாலைகளில் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் கார் முதன்முறையாக நேற்று தென்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க்கின் கனவு வாகனமாகக் கருதப்படும் இந்த எலக்ட்ரிக் கார், துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உடலமைப்பும், வித்தியாசமான விண்வெளி ஓடம் போன்ற வடிவமைப்பும் காரணமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அவினாசி சாலை மற்றும் ஆர். எஸ். புரம் பகுதிகளில் வலம் வந்த இந்த சொகுசு வாகனத்தை கார் பிரியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.