கோவை அவிநாசி சாலை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் அருகே அமைக்கப்பட்டுள்ள யூ-டர்னில் வலதுபுறம் திரும்பும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அங்குள்ள பேரிகேடுகள் மற்றும் பேருந்து நிறுத்தம் காரணமாக
போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், பேரிகேடுகளை பின்புறம் மாற்றவோ அல்லது அகற்றவோ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.