கோவை, வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கஞ்சா விற்ற இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 12,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சேரன் மாநகரைச் சேர்ந்த அபுதாகிர் (35) மற்றும் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அசோக் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.