கோவை: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

67பார்த்தது
கோவை: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஆண் ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார். இதனைப்பார்த்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்த விவரம் கிடைக்கவில்லை. உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி