கோவை அரசு மருத்துவமனையின் கிட்னி வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி, தண்ணீர் வசதியின்றி மோசமான நிலையில் உள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தினமும் 30 முதல் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த வார்டில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டியுள்ளதால் பெண் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். தண்ணீர், மின்விளக்கு வசதி இல்லாததுடன் மருத்துவக் கழிவுகள் தேங்கியுள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.