கோவை: ஏ. ஐ கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

0பார்த்தது
கோவை–அவிநாசி சாலையில் உள்ள ஜி. டி. நாயுடு மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரூ. 3 கோடி மதிப்பில் ஏ. ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டின் நீளமான இந்த மேம்பாலத்தின் 10. 1 கி. மீ தூரத்திற்கு 44 இடங்களில் உயரமான கம்பிகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண், சீட் பெல்ட் பயன்பாடு, அதிவேகம், கூடுதல் விளக்குகள், அதிக ஏற்றம் போன்ற விதிமுறை மீறல்களைக் கண்டறியும். 60 கி. மீ வேக வரம்பை மீறினால் அபராதம் விதிக்கப்படும். கேமரா காட்சிகள் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைக்கப்படும். கோவையில் முதன்முறையாக இத்தகைய ஏ. ஐ கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி