கோவை: வீட்டு வசதி வாரிய கடன்; வட்டி தள்ளுபடி அறிவிப்பு

487பார்த்தது
கோவை: வீட்டு வசதி வாரிய கடன்; வட்டி தள்ளுபடி அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு அல்லது குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களுக்கு தமிழக அரசு வட்டித் தள்ளுபடியை அறிவித்துள்ளது. மாதத் தவணை தாமதமாக செலுத்தியவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடியாகும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியும் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்யப்படும். 

இந்த சலுகை மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும். வட்டி சுமையின்றி நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற விருப்பமுள்ளவர்கள் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி