முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகளுக்கான அமைச்சர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ விக்னேஷ் பொறுப்பேற்றுள்ளார். அதே போல் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.