கோவையில் ரயில் கல்வீச்சு: ஆர். பி. எப் தீவிர கண்காணிப்பு

1பார்த்தது
கோவை ரயில் வழித்தடங்களில் தொடர்ச்சியாக கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மூன்று கல்வீச்சு சம்பவங்களில் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி, இன்ஜின் விளக்கு சேதமடைந்ததோடு, சரக்கு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய 7 சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ரயில்கள் மீது கல்வீசுவது மனித உயிருக்கு ஆபத்தானது என்பதால், இது போன்ற சம்பவங்கள் குறித்து 139 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்க அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி